மன்னார் மாவட்டம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு வருகின்றது குறிப்பாக கரையோர பகுதிகள் மற்றும் வெள்ள அபாயங்களை சந்திக்காத பகுதிகள் என பல பகுதிகள் தற்போது பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றது அதில் அதிகளவான கிராமங்கள் அடங்கி வருகின்றன ! குறிப்பாக அனைத்து பகுதிகளுக்கும் இந்த வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு மிகப் பிரதான காரணமாக அந்த பகுதிகளில் வீதிகளுக்கான சரியான உட்கட்டமைப்பு வசதிகள் கால்வாய்கள் இல்லாமையே காரணமாகும்.
இதனால் மன்னார் மாவட்டத்தில் பல கிராமங்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றது அதில் ஒரு கிராமமாக காணப்படும் கீரி கிராமம் தொடர்பான காணொளியே இது ! இந்தப் பகுதியும் கடந்த காலங்களில் வெள்ளப்பெருக்கினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றது இது மன்னார் மாவட்டத்தில் தென் கடலோபகுதியில் காணப்பட்டு வருகின்றது இந்தப் பகுதியிலும் பல மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்களுடைய அன்றாட வருமானம் மீன்பிடி மற்றும் சுயதொழில் என காணப்பட்டு வருகின்றது இவர்கள் எந்த வெள்ளப்பெருக்கினால் பல நெருக்கடிகளை கடந்த காலங்களில் சந்தித்து வருகின்றனர். இதற்கும் மிக முக்கியமான காரணமாக இவர்களுடைய பகுதிகளில் காணப்படும் பிரதான வீதிகள் சரியான முறையில் புனரமைக்கப்படாமல் காணப்படுவதும் அதே சமயத்தில் அதற்கான கால்வாய் வசதிகள் இல்லாததும் சில இடங்களில் கால்வாய் வசதிகள் இருந்தும் அவை சரியான முறையில் இல்லாததும் காரணமாக அமைந்துள்ளது.
இதனால் அந்த பகுதி மக்கள் மழைக்காலத்தில் வெள்ளத்தை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது..
இந்த வெள்ளப்பெருக்கு நிலையால் அவர்களுடைய பிரதான தொழில் நிலைகள் மற்றும் சுயதொழில் செய்பவர்களின் நிலைமை என்பது மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான சரியான ஒரு முறை அரசாங்கம் பொறுப்புடன் செயல்பட்டு இவர்களுக்கான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இவர்களிடத்தில் அதிகமாக காணப்பட்டு வருகின்றது அத்தோடு எந்த ஒரு திட்டத்தை மேற்கொண்டாலும் அவை மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் செய்ய வேண்டும் என்பதும் அவர்களுடைய கருத்தாக காணப்பட்டு வருகின்றது.