குறித்த ஒரு சில மாதங்களாக மன்னார் மாவட்டத்தில் தெற்கு கடற்பரப்பில் அதிகளவான பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் கரை ஒதுங்கி வருகின்றது இதில் குறிப்பாக பாவிக்கப்பட்ட குடிநீர் போட்டல்களே அதிகமாக உள்ளது! இதை தென்பகுதியில் சௌத் பார் தொடக்கம் தலைமன்னார் ராமர் பாலம் வரை தொடர்ச்சியாக காணப்பட்டு வருகின்றது
இவற்றை துப்புரவு செய்யும் பணியில் கடற்கரையினர் ஈடுபட்டாலும் இதன் வருகை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது அதிலும் குறிப்பாக அங்கே இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் அதிகளவானது இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாட்டு பகுதிகளை சேர்ந்தவையாக அதிகம் காணப்படுகின்றது !
காற்றின் மாற்றம் காரணமாக கழிவு பொருட்கள் கரையொதுங்குவது வளமை தான் ஆனால் இவ்வளவு பிளாஸ்டிக் பொருட்கள் இந்த கடற்பரப்பில் ஒதுங்குவது என்பது ஒரு அச்சத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தும் ஒரு விடயமாகும்! இந்தப் பகுதி குறிப்பாக கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் காணப்படும் ஒரு முக்கிய பகுதியாக காணப்பட்டு வருகின்றது இந்த பகுதியில் இவ்வளவு பிளாஸ்டிக் பொருட்கள் கரை ஒதுங்குவது என்றால் இந்தியாவில் கழிவுப்பொருட்களை அவர்கள் எவ்வாறு பேணுகின்றார்கள்? அவர்கள் கழிவு பொருட்களை அகற்றும் அல்லது அவற்றை வீசும் இடமாக கடற்பரப்பு காணப்படுகின்றதா? இது தொடர்பாக அவர்கள் எந்த ஒரு கரிசனையும் எடுக்கவில்லையா? என்பது எமது கேள்வியாக உள்ளது ! சூழல் மாசடைதல் சூழல் பாதுகாத்தல் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்தால் மட்டும் போதாது அது சார்ந்தும் செயற்பட வேண்டும் அவ்வாறு செயல்பட்டிருந்தால் இவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கையில் மன்னார் தீவு பகுதிக்குள் வருவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்காது.
இது ஒரு சமூக ஊடக அல்லது ஒரு செய்தியாக கடந்து விடலாம் ஆனால் இவை சர்வதேச மட்டத்தில் பேசப்பட வேண்டிய முக்கிய சூழல் சார்ந்த விடயமாகும் நாம் எமது கடற் பகுதியையும் சரி சுற்றுப்புற சூழலையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மட்டத்திலான பல நடவடிக்கைகள் இடம் பெற்று வரும் இந்த நேரத்தில் இத்தனை லட்சத்திற்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் இந்த கடற்கரை பகுதியில் கழிவாக அடைவதை சிந்திக்கவும் இது ஒரு கேள்வியை எழுப்பும் விடயமாகவே காணப்பட்டு வருகின்றது !
இந்தப் பகுதியில் வசிக்கும் இளம் சமுதாயமான எங்களின் அடையாளப்படுத்தலும் சமூக பொறுப்புமாக காணப்படுகின்றது. இது தொடர்பாக இந்திய அரசும் தங்கள் கருத்தை வெளியிட வேண்டும் ! இதற்கான பரிந்துரைகளையும் இலங்கை அரசாங்கம் இந்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் இல்லையென்றால் எதிர்காலம் பிளாஸ்டிக் கழிவுகளை நிரப்பும் ஒரு பகுதியாக இலங்கை காணப்படும் நிலை ஏற்படும்!